கூடலூரில் இருந்து மேல்கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்த்கேம்ப் வளைவில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் பாதாள குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாதாள குழிகளை சரி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.