வேகத்தடைக்கு அவசியம் வர்ணம்

Update: 2022-09-25 13:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து குந்தாரப்பள்ளி வரை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைந்துள்ளன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், விபத்துக்களை குறைப்பதற்காகவும் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஒரு சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் இருப்பது தெரியாததால் விபத்துகள் நடக்க அதுவே காரணமாகி விடுகிறது. குறிப்பாக ராமாபுரத்தில்  உள்ள வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே வேகத்தடைகள் தெரியும் வகையில் ஒளிரும் விளக்குகள் மற்றும் வர்ணம் பூசுவது போன்றவற்றை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்