தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள்
திருப்பூர் தாராபுரம் ரோடு வெள்ளியங்காடு பிரதான சாலையான 60 அடி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இவர்கள் ஓட்டி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. காரணம் அப்பகுதியில் ேதாண்டப்பட்ட மண்புழுதி பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் படுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். மேலும் அப்பகுதியே புழுதிக்காடாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் உள்ள கடைகளில் மண் குவிந்து விடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தோண்டப்பட்ட குழிகளை மூடி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஏ.மனோகர்,வெள்ளியங்காடு.
9442047067