மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி கண்ணதாசன் தெரு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.