தெருவின் அவலம்

Update: 2022-09-23 16:09 GMT

தெருவின் அவலம்

திருப்பூர் ராயபுரம் சித்தப்பா கார்டன் எதிரே சிங்காருவேல் கிளினிக் சந்து உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து புதர்மண்டி கிடக்கிறது. ஆங்காங்கே சாலையில் செடிகள் வளர்ந்துஉள்ளன. மேலும் குப்பைகள், மருந்து கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இது நீண்ட காலமாக இதே நிலையில் உள்ளதால் கொசுகள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தெருவிளக்குள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சுழ்ந்து பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-ரவி, திருப்பூர். 98430 59791

மேலும் செய்திகள்