விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரெயில் நிலையம் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் சாலையை சீரமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு முதற்கட்ட பணி தொடங்கியது. தற்போது வரை அந்த சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்கும் பணியினை உடனே தொடங்கி முடிக்க வேண்டும்.