சாலையை சீரமைப்பது அவசியம்

Update: 2022-09-23 13:58 GMT
விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் ஆபேஷா தக்கா தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. அதன் பிறகு அப்பகுதியில் சாலை சீரமைக்காமல் அப்படியே போட்டுவிட்டனர். இதனால் அங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் உடனடியாக தார் சாலை வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்