விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் இருந்து வி சாத்தனூர் செல்லும் சாலை குண்டு, குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் விபத்துகளும் அடிக்கடி நிகழ்வதால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.