நாகை வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்கி வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.