சென்னசமுத்திரம் பேருராட்சிக்கு உள்பட்ட பழைய சோளக்காளிபாளையத்தில் இருந்து சோளக்காளிபாளையம் வரை உள்ள 1½ கிலோ மீட்டர் தார்சாலை போட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த சாலை முழுவதிலும் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைப்பதுடன், புதிதாக தார் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.