திருப்பூர் 15 வேலம்பாளையம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் சாலை மிகவும் பழுதாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். இரவு நேரத்தில் சாலையில்மேடு இருப்பது தெரியவில்லை. இதனால் குடும்பத்தோடு மோட்டார்சைக்கிளில் வருபவர்கள் நடுரோட்டில் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.