சேரன்மாதேவி தாலுகா பாப்பாக்குடி அருகே குமாரசாமிபுரம் நடுத்தெருவில் ரோடு அருகில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் உள்ள ரோடு சேதம் அடைந்து பள்ளங்களாக உள்ளது. இந்த வழியாக அதிகளவில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பாலத்தை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.