சாலையோரத்தில் மண்அரிப்பு

Update: 2022-09-22 11:49 GMT

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை அடுத்த பாலாக்குடி பகுதி வெண்ணாற்றின் அருகே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் உருவாகி இருக்கிறது. இதன்காரணமாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மண்அரிப்பு காரணமாக  ஆற்றுகரையோரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்