மழையால் பாதிக்கப்பட்ட சாலை

Update: 2022-07-14 10:11 GMT

கோவை போத்தனூர் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளம் தோண்டிய இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதுடன் சாலையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது