விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரம் கருமன்கோவில் ரோட்டில் சாலையின் மையப்பகுதியில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் தவறி விழும் சம்பவம் தொடர்கிறது. இதை தவிர்க்க ஆபத்தான பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.