ஆனைமலை கீரைக்காரர் வீதியில் உள்ள சாலை மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரமுள்ள சாக்கடைக்குள் இறங்கி விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக ஒருசில இடங்களில் சாலைகள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபத்தான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?