மெதுக்கும்மல் ஊராட்சிக்குட்பட்ட கைப்பூரிவிளையில் இருந்து முள்ளிறங்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.