திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்புக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கொண்டே இருப்பதால் தார்சாலை தற்போது மண்பாதையாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.