கால்வாய், சாலை வசதி

Update: 2022-09-19 16:21 GMT
தர்மபுரி மாவட்டம் கடத்துரில் இருந்து 1.5 km தொலைவில் உள்ளது புதுரெட்டியுர் கிராமம். இங்குள்ள மேல்தெருவில் கடந்த 22 வருடமாக சாலை மற்றும் கழிவுநீர் வசதி இன்றி அவதிப்பட்டு வருகிறோம். பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மழை காலங்களில் சாலையில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் கடுமையான நோய் பரவும் ஆபாயம் உள்ளது. பலமுறை சாலை அமைக்க ஆணை வந்தும் அதை அமைக்காமல் புறக்கணித்து வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்