சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-19 13:49 GMT

திருவாரூர் கூட்டுறவு சங்க வளாகத்தில் சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், சரக துணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் பயிற்சி நிலையத்தில் படிப்பவர்கள் உள்பட ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலை செம்மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்