அரியாங்குப்பம் அடுத்துள்ள டோல்கேட் கிராமத்தில் சேரன், சோழன், பாண்டியன் என பல்வேறு குறுக்கு வீதிகள் உள்ளன. இ.சி.ஆர். சாலை சந்திக்கும் இடத்தில் இந்த வீதிகள் உள்ளன. அப்பகுதிகளில் சாலையோர சிமெண்டு சிலாப்புகள் உடைந்து சேதம் அடைந்துள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?