சாலை சேதமடைய வாய்ப்பு

Update: 2022-09-18 14:09 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி கடை தெருவில் இருந்து ஆற்றங்கரை வரை இருந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலையின் அடியில் போடப்பட்ட செம்மண் தற்போது சாலையில் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் விரைவில் சாலை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்