செய்துங்கநல்லூர்- வசவப்பபுரம் ரோட்டில் பசும்பொன் நகர் பாலம் அருகில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. இதேபோன்று சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாகவும், சாலையோரம் மண் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.