திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி, ஓம் சக்தி கோவில் ேராடு சந்திப்பு பகுதியில் ரோட்டின் நடுவே மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக வாகனங்கள் திரும்பும் இடத்தில் மண் குவியல் இருப்பதால் இங்கு கனரக வாகனங்கள் திரும்புவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. மேலும் எதிர்,எதிரே வாகனங்கள் வரும் நேரங்களில் மண் குவியல் உள்ள இடத்தில் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பிற வாகனங்களுக்கிடையே சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.