திக்கணங்கோடு பஞ்சாயத்தில் சிவன் கோவில் மகாதேவர் குளத்தின் மேற்கு பகுதியில் இருந்து வாழவிளை செல்லும் கான்கிரீட் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே விவசாய நிலத்தில் இருந்து சாலையில் தண்ணீர் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், சாலையில் பாசி படர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாக பாயும் தண்ணீர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜூ, திக்கணங்கோடு