பந்தலூர் தாலுகா பகுதியில் முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள குழியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.