வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

Update: 2022-07-13 12:05 GMT

ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கீழ்ப்பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் வேகத்தடையின் மேல் வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் புதிதாக அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையில் வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரவிச்சந்தின், ஆவுடையாள்புரம்.

மேலும் செய்திகள்