குரும்பூர் அருகே கீழநாலுமாவடியில் இருந்து தேரிக்காடு வழியாக பூச்சிக்காடு செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகிறார்கள். ஆனால் சாலையே தெரியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
பாலமுருகன், ஏரல்.