பாலத்தின் அருகே சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-14 14:23 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அகரதிருமாளம்  ஊராட்சியில் விராவாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் தெருவிற்கு செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் பல மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது பணி முடிந்த நிலையில் பாலத்தை ஒட்டி உள்ள தார் சாலை சேதமடைந்து மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் அருகே சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்