வடிகால் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும்

Update: 2022-09-14 12:13 GMT

திருவாரூர் நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு கல்வி நிலையங்களும் உள்ளன. நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் பகுதியில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் பணியினால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மழைநீர் வடிகால் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்