தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-07-13 10:54 GMT
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண்சாலை சேறும்,சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் சேற்றில் வழுக்கி கீழே விழும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்