திருப்பூர் மும்மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். எனவே சாைலயோரம் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர். அகற்றப்பட்ட கட்டிட கழிவுகள் சாலையோரம் கிடக்கிறது. கற்கள் ரோட்டின் மேலே கிடக்கிறது இது விபத்தை ஏற்படுத்தும். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அவற்றை உடனே அகற்ற வேண்டும்.