கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நரிமேடு கிராமத்திற்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.