கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள சிக்னல் பகுதியில் நடு ரோட்டில் குழி உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த குழியை சரி செய்ய வேண்டும்.