கிருஷ்ணகிரி நகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து உள்ளன. குறிப்பாக சென்னை, பெங்களூரு சாலைகளில் உள்ள பள்ளத்தால் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் சாலையில் பராமரிப்பு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகளும் சரிவர முடப்படாததால் மேடும், பள்ளமாக பல இடங்களில் காணப்படுகின்றன. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.