தர்மபுரி மாவட்டம் புலிகரையில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ. தூரம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பன், புலிகரை, தர்மபுரி.