பண்ருட்டி சித்திரைசாவடி-கும்பகோணம் சாலையிலிருந்து கெடிலம் பாலம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.