ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி-அறிவித்தி கிராமம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சாலையில் சிறு, சிறு விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்கிவருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சாலையை சீரமைக்க வேண்டும்.