சேதம் அடைந்த சாலை

Update: 2022-09-11 10:48 GMT

திருப்பூர் குமார் நகர் பகுதியில் அமைந்துள்ள மாநாகராட்சி குடிநீர் தொட்டி முன்பாக சாலையில் நடுவே அமைந்துள்ள குடிநீர் திறப்பு வால்வை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த சாலையில் பகல் நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அந்த குழியை பார்த்து வாகனத்தை ஓரமாக ஓட்டி சென்று விபத்தை தவிர்க்கலாம். ஆனால் இரவு நேரத்தில் எதுவும் நடக்கலாம். எனவே விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள பள்ளம் சரி செய்யப்படுமா?


மேலும் செய்திகள்