சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-10 17:39 GMT

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மெய்யனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், சேலம்.

மேலும் செய்திகள்