செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியாததால், அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வேகத்தடையில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.