கிருஷ்ணகிரியில் ஓசூர்- பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படுகிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பலரும் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவதால் அவை சாலைகளில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆடு மாடுகளை மேய விடுபவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், கிருஷ்ணகிரி.