தர்மபுரி பஸ் நிலையம் அருகே பூங்காவின் மேற்கு பகுதியில் 4 சாலைகள் இணைகின்றன. இந்த பகுதியில் 4 புறங்களில் இருந்தும் வாகனங்கள் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை முறைப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.