ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த வழியாக வெளியூர் செல்லும் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?