நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு ரத்தன் டாடா பகுதி சேரும் சகதியுமாகவும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் செல்வதால் அவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மண் குவியலால் விபத்துகளும் நடக்கிறது. எனவே ரத்தன் டாடா பகுதியில் சாலையோரம் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.