நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பஸ் நிலையம் அருகில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு செல்லும் நடைபாதை இன்டெர்லாக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நடைபாதையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?