கிருஷ்ணகிரி நகரில் இருந்து சுற்றியுள்ள பர்கூர், காவேரிப்பட்டணம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கக்கூடிய பஸ்கள் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு பஸ் நிறுத்தங்களிலும் காலதாமதம் செய்யாமல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.