கோவை மாநகர பகுதியில் அரசு சார்பில் ஏராளமான ரெட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தானியங்கி முறையில் கதவுகளை மூடும் வசதி உள்ளது ஆனால் பெரும்பாலான பஸ்களில் கதவுகளை மூடுவது இல்லை. இதனால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநகர பகுதியில் இயக்கப்படும் அனைத்து ரெட் பஸ்களில் முறையாக கதவுகளை மூட வழிவகை செய்ய வேண்டும்.