நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் லவ்டேல் சந்திப்பு பகுதிக்கு முன்னால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சமீபத்தில் பெய்த மழை காரணமாக குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால் சாலையில் உள்ள குழிகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முன் வர வேண்டும்.