கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டையில் இருந்து மகராஜகடைக்கு செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் சில இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இந்த வேகத்தடைகளை வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், கிருஷ்ணகிரி.